+91 9965 533 544

Friday, 30 October 2015

MCX, NIFTY & BANK NIFTY LEVELS

நவம்பர் மாதம் முழுவதும் இலவசமாக டிரேடிங் அளவுகள் நமது BLOG-ல் பதிவிடப்படும்.  MCX மட்டுமல்லாது NIFTY & BANK NIF... thumbnail 1 summary




நவம்பர் மாதம் முழுவதும் இலவசமாக டிரேடிங் அளவுகள் நமது BLOG-ல் பதிவிடப்படும். 




MCX மட்டுமல்லாது NIFTY & BANK NIFTY அளவுகள் பதிவிடப்படும். கண்டிப்பாக பயனுள்ளதாக  இருக்கும். 

நமது BLOG-ஐ தினமும் பார்த்து பயனடையுங்கள்.

மாற்றங்களுடன் இந்த வார டிரேடிங் விவரங்கள்:

வாரத் தொடக்கத்தில் ஏற்பட்ட நட்டத்தால் இந்த வாரம் ஒரு மந்தமான வாரமாகவே இருந்தது. பெரிதாக எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால் சி... thumbnail 1 summary




வாரத் தொடக்கத்தில் ஏற்பட்ட நட்டத்தால் இந்த வாரம் ஒரு மந்தமான வாரமாகவே இருந்தது. பெரிதாக எதுவும் நடக்கவில்லை. ஏனென்றால் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நட்டத்தைத் தவிர்க்கும் வகையில் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளேன்.


டிரேடிங்கில் எந்த ஒரு நல்ல யுக்தியும் செயல்படாமல் போவதற்கு RISK MANAGEMENT சரியாக செய்யப்படாததே காரணம்.  அதீத நம்பிக்கையால் RISK அதிகமாகி விட்டது. ரிஸ்கைக் குறைப்பதற்கு லாட் சைஸ் குறைக்கப்பட்டுள்ளது.



சென்ற வாரம் 4 லாட் CRUDE OIL MINI வர்த்தகம் செய்யப்பட்டது. இந்த வாரம் அனைவருக்கும் 2 லாட்டாக மாற்றியுள்ளேன். மேலும் CRUDE OIL-ல் மட்டும் வர்த்தகம் செய்யாமல் வாய்ப்புள்ள மற்ற பொருட்களிலும் வர்த்தகம் செய்யப்படுகிறது. ரிஸ்க்கைக் குறைக்க இந்த நடவடிக்கை. 



ரிஸ்கைக் குறைத்தால் தானாக வருமானமும் குறைந்து விடும். அதற்கு என்ன செய்வது. டிரேடிங்கைப் பொறுத்தவரை ஒரு பொன் மொழி உண்டும். “SUCCESSFUL STOCK TRADERS DO NOT MARRY THEIR STOCKS, THEY ONLY DATE THEM AS LONG AS THEY ARE PROFITABLE”. அதாவது ஜெயிக்கும் வர்த்தகர்கள் எந்த பங்கையும் திருமணம் செய்து கொள்வதில்லை, மாறாக கவர்ச்சியாக உள்ள பங்கை டேட்டிங் மட்டும் செய்வர் என்பதாகும். 



இதனடிப்படையில் CRUDE OIL-ல் மட்டும் வர்த்தகம் செய்யாமல் நல்ல வாய்ப்புள்ள மற்ற பொருட்களிலும் வர்த்தகம் நடக்குமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய மாற்றங்களால் வரும் வாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்று உறுதியாக சொல்லிக் கொள்கிறேன்.



மேலும் டிரேடிங்கில் பொறுமை மிக அவசியம். நமது கெட்ட நேரத்தில் நாம் பொறுமையாக இருந்தால் தான் நல்ல நேரத்தில் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். ஏன் சொல்கிறேனென்றால் இந்த வாரம் ஒரு எதிர்பாரா சம்பவம் ஒன்று நடந்தது. வருத்தமாக உள்ளது. ஒரு மாதம் 20 வர்த்தக தினம் நீங்கள் பொறுமையாக இருந்தால்தான் நீங்கள் லாபத்தை அறுவடை செய்ய முடியும். உங்கள் முதலீட்டிற்கு பாதுகாப்

நான் எப்பவுமே தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது வழக்கம். இந்த தவரிலிருந்தும் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன். அதை சரி செய்ய இனி புதிதாக கணக்கு திறப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன். புதிய திட்டத்தைத் தீபாவளிக்குப் பிறகு அறிவிக்கிறேன்.

குறிப்பு:
ஏற்கனவே விண்ணப்பப் படிவங்கள் வாங்கியவர்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் கணக்கு திறந்து கொள்ளலாம். உங்கள் முதலீட்டிற்கு நான் பொறுப்பு ஒரு மாதம் வர்த்தகம் நடக்க அனுமதித்தால்... இடையிலேயே சென்றால் நான் பொறுப்பல்ல.
கணக்கு திறக்க விருப்பமில்லாதவர்கள் விண்ணப் படிவங்களை திருப்பி அனுப்பிவிட்டால் எனக்கும் கம்பெனிக்கும் இருக்கும் உறவில் பாதிப்பு ஏற்படாது. உங்களையும் யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

சில  காரணங்களால் தாமதமாக கணக்கு திறக்க விரும்புபவர்கள் அதை சொல்லி விட்டால் திரும்ப அழைக்க மாட்டார்கள். இன்று, நாளை என்று அழைய விட வேண்டாம். புரிந்து கொள்ளுங்கள். நன்றி.
நான் யாரையும் அழைத்து மார்க்கெட்டிங் செய்வதில்லை. நீங்கள் தான் விரும்பி வருகிறீர்கள். அதே போல் விருப்பமில்லை என்றாலும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. உங்களை யாரும் வற்புறுத்த முடியாது. ஆனால் சிறு தொகை செலவு செய்து உங்களுக்கு விண்ணப்பப்படிவம் அனுப்பியிருப்பார்கள். அந்த விண்ணப்பபடிவத்தை அச்சிடுவதற்கும் செலவு செய்திருப்பார்கள். ஆகையால் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் மற்றவர்களுக்காவது பயன்படட்டுமே.

என்னாலும் குறிப்பிட்ட கணக்குகளை மட்டுமே கண்காணிக்க முடியும். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் அந்த இடத்தில் விருப்பமுள்ள மற்றொரு நபரை நிரப்ப முடியும்.

உங்கள் புரிதலுக்கு நன்றி.

Sunday, 25 October 2015

ரோபோ டிரேடிங்

ரோபோ டிரேடிங் அறிமுகம்: மனிதர்களாகிய நாம் எந்த வேலையும் செய்யாமல் நம்மால் உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் மூலமாக வர்த்தகம் நடைபெறு... thumbnail 1 summary


ரோபோ டிரேடிங் அறிமுகம்:



மனிதர்களாகிய நாம் எந்த வேலையும் செய்யாமல் நம்மால் உருவாக்கப்பட்ட சாப்ட்வேர் மூலமாக வர்த்தகம் நடைபெறுவது தான் ரோபோ டிரேடிங். 

நம்முடைய சூத்திரங்களை சாப்ட்வேர் மூலமாக உள்ளீடு செய்து விட்டோம் என்றால் சாப்ட்வேர் மூலம் வாங்குவது/விற்பது, நட்டத்தடுப்பு போடுவது, இலக்கு விலையை அடைவது எல்லாமே தானாகவே நடக்கும்.
நம்முடைய தலையீடு எதுவும் தேவையில்லை.

நிறைகள்:
  1. பயம் மற்றும் பேராசை காரணமாக நாம் செய்யும் தவறுகள் எதுவும் நடக்காது.
  2. பயம் காரணாமாக இலக்கு விலைக்கு முன்னதாகவே வெளியேறுவது தடுக்கப்பட்டு இலக்கு விலையில் வெளியேற முடியும்.
  3. பேராசை காரணமாக தேவையில்லாத வர்த்தகம் நடைபெறுவது தடுக்கப்படும்.
  4. நம் குருட்டு நம்பிக்கை காரணமாக நட்டத் தடுப்பு போடாமல் நட்டமடைவது தடுக்கப்படும்.
  5. சில வர்த்தகம் நம்முடைய சொந்த காரணங்களாலும், வெளி வேலை காரணமாகவும் செய்யமுடியாமல் போகலாம். ஆனால் ரோபோ டிரேடிங்கில் அனைத்து வர்த்தகமும் தானாகவே நடைபெறும்.
குறைகள்:
  1. நாம் தலையிட வேண்டியதில்லை என்றாலும் நாம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு இருக்க வேண்டும்.
  2. இன்டர்நெட் இணைப்பு இல்லா சமயங்களில் சில பிரச்சனைகள் வரக்கூடும்.
  3. சிறு தவறு நடந்தாலும் பெரிய இழைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

கணக்கு திறக்க அழையுங்கள்:
P. அந்தோணிராஜ்
செல்: 09965 533 544

செபி இணைப்பிற்கு பிறகு MCX-ல் வரவிருக்கும் மாற்றங்கள்:

மார்ஜின் தொகை 5%-லிருந்து 12%-மாக உயரப் போகிறது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு பாதகமான விஷயம். இந்த முறை அமல்படுத்தும் போது... thumbnail 1 summary




  • மார்ஜின் தொகை 5%-லிருந்து 12%-மாக உயரப் போகிறது.


இது சிறு முதலீட்டாளர்களுக்கு பாதகமான விஷயம். இந்த முறை அமல்படுத்தும் போது நாம் அதிக முதலீடு செய்ய வேண்டி வரும். குறிப்பாக COPPER வர்த்தகம் செய்வதற்கான மார்ஜின் தொகை தொராயாமாக ரூ.17,000/-. ஆனால் இனி வரும் காலங்களில் ரூ.40,800/- ஆக மாறக் கூடும்.

அதேபோல் CRUDEOIL மார்ஜின் இப்போது 7% என்று உள்ளது. இப்பொழுது தேவைப்படும் தொகை ரூ.21,000/- என்றளவில் உள்ளது. இனி வரும் நாட்களில் ரூ.36,000/- என்றளவில் இருக்கும். அதுவே CRUDEOIL விலை ஒரு பேரலுக்கு ரூ.6,000/- என்றளவில் உயர்ந்தால் நமக்கு மார்ஜின் தொகையாக ரூ.72,000/- தேவைப்படும்.

  • LIMIT/EXPOSURE ஆகியவைகள் நிறுத்தப்பட்ட முழு தொகை இருந்தால் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும்.
தற்சமயம் ரூ.2000/- இருந்தாலே CRUDE OIL MEGA வர்த்தகம் செய்ய முடியும். இனி வரும் நாட்களில் முழு மார்ஜின் தொகை இருந்தால் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும்.
  • கமாடிட்டி வர்த்தகத்தில் OPTION வரப்போகிறது.

இது OPTION தெரிந்தவர்களுக்கு நல்ல விஷயம். தெரியாதவர்களுக்கு அதைக் கற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். நானே புதிதாகத்தான் கற்க வேண்டும்.

  • தற்போது கமாடிட்டி வர்த்தகத்திற்கு தனியாகவும், ஈக்விட்டி வர்த்தகத்திற்கு தனியாகவும் முதலீடு செய்து தான் வர்த்தகம செய்ய வேண்டும். வரும் நாட்களில் ஒரே முதலீட்டில் அனைத்து வர்த்தகமும் செய்யலாம்.
இது மட்டும்தான் அனைவருக்கும் பயன்படக்கூடிய நல்ல விசயம்.

குறிப்பு:

சில நடவடிக்கைகள் கசப்பாக இருந்தாலும் இவையனைத்தும் முதலீட்டாளர் நலனுக்காகத் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவைப் பாருங்கள்:
https://youtu.be/q9tTdYNpch4