+91 9965 533 544

Sunday, 25 October 2015

செபி இணைப்பிற்கு பிறகு MCX-ல் வரவிருக்கும் மாற்றங்கள்:

மார்ஜின் தொகை 5%-லிருந்து 12%-மாக உயரப் போகிறது. இது சிறு முதலீட்டாளர்களுக்கு பாதகமான விஷயம். இந்த முறை அமல்படுத்தும் போது... thumbnail 1 summary




  • மார்ஜின் தொகை 5%-லிருந்து 12%-மாக உயரப் போகிறது.


இது சிறு முதலீட்டாளர்களுக்கு பாதகமான விஷயம். இந்த முறை அமல்படுத்தும் போது நாம் அதிக முதலீடு செய்ய வேண்டி வரும். குறிப்பாக COPPER வர்த்தகம் செய்வதற்கான மார்ஜின் தொகை தொராயாமாக ரூ.17,000/-. ஆனால் இனி வரும் காலங்களில் ரூ.40,800/- ஆக மாறக் கூடும்.

அதேபோல் CRUDEOIL மார்ஜின் இப்போது 7% என்று உள்ளது. இப்பொழுது தேவைப்படும் தொகை ரூ.21,000/- என்றளவில் உள்ளது. இனி வரும் நாட்களில் ரூ.36,000/- என்றளவில் இருக்கும். அதுவே CRUDEOIL விலை ஒரு பேரலுக்கு ரூ.6,000/- என்றளவில் உயர்ந்தால் நமக்கு மார்ஜின் தொகையாக ரூ.72,000/- தேவைப்படும்.

  • LIMIT/EXPOSURE ஆகியவைகள் நிறுத்தப்பட்ட முழு தொகை இருந்தால் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும்.
தற்சமயம் ரூ.2000/- இருந்தாலே CRUDE OIL MEGA வர்த்தகம் செய்ய முடியும். இனி வரும் நாட்களில் முழு மார்ஜின் தொகை இருந்தால் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும்.
  • கமாடிட்டி வர்த்தகத்தில் OPTION வரப்போகிறது.

இது OPTION தெரிந்தவர்களுக்கு நல்ல விஷயம். தெரியாதவர்களுக்கு அதைக் கற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். நானே புதிதாகத்தான் கற்க வேண்டும்.

  • தற்போது கமாடிட்டி வர்த்தகத்திற்கு தனியாகவும், ஈக்விட்டி வர்த்தகத்திற்கு தனியாகவும் முதலீடு செய்து தான் வர்த்தகம செய்ய வேண்டும். வரும் நாட்களில் ஒரே முதலீட்டில் அனைத்து வர்த்தகமும் செய்யலாம்.
இது மட்டும்தான் அனைவருக்கும் பயன்படக்கூடிய நல்ல விசயம்.

குறிப்பு:

சில நடவடிக்கைகள் கசப்பாக இருந்தாலும் இவையனைத்தும் முதலீட்டாளர் நலனுக்காகத் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு இந்த வீடியோவைப் பாருங்கள்:
https://youtu.be/q9tTdYNpch4


No comments

Post a Comment